நீ விழுந்தபோதெல்லாம்
தாங்கிப் பிடிக்கும் இந்தக் கை..
மனம் உடையும்போதெல்லாம்
தட்டிக் கொடுக்கும் இந்தக் கை..
தனியே நீ அழும்போதெல்லாம்
உன் கண்ணீரை துடைக்கும் இந்தக் கை..
அது வேறு யார் கையும் அல்ல..
உன்னுள் உள்ள உனது தன்னம்பிக்கை..
அதை மட்டும் ஒருபோதும் இழந்து விடாதே..!